--- --:--:-- --

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி!

12

ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான ரூபாய் 262 கோடி ரூபாய் மதிப்பிலான ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தின் மூலமாக தலா பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

 

தடை பள்ளியில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி ஆண்டுதோறும் வாகன ஃபிட்னஸ் சான்றிதழ் பெறுவதற்கும், வாகன காப்பீடு பெறவும் பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் தினம்தோறும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருப்பதாகவும் கூறிய ஓட்டுநர்களின் துயர் துடைக்கவே கடந்த ஆண்டு முதல் இந்தத் திட்டத்தின் மூலமாக தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

 

கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக 236 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் இந்த ஆண்டு 262 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்படவுள்ளதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon