சேலம் வன உயிரியல் பூங்காவுக்குப் படையெடுக்கும் பட்டர்பிளைஸ்!
சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு பல வகையான வண்ணத்துப் பூச்சிகள் வரத்தொடங்கியுள்ளன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சி உணவு பூங்கா ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.
இங்கு ஆனகூப்பியா, மில்க்ஷேக், ஜெனியா. தேள்கொடுக்கு விட 38 வகையான செடிகள் வளர்க்கப்பட்டன. இந்த செடிகளில் பூக்கும் பூக்களில் தேன் நிறைய இருக்கும் என்பதால் வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. காமஞ்சே, சிற்றஸ், புளு பட்டர் 24 வகையான வண்ணத்துப் பூச்சிகள் பூங்காவிற்கு வந்து செல்வதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
மழைக்காலம் வரவிருப்பதால் கூடுதலாக வண்ணத்துப்பூச்சிகள் வரும் வாய்ப்புள்ளதாக கூறும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வண்ணத்துப் பூச்சிகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.






