--- --:--:-- --

8 வழிச்சாலை வந்ததால் தான் அதன் அருமை தெரியும் எனக்கூறிய கடம்பூர் ராஜு!

9.1

வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் சேலம் – சென்னை எட்டு வழி சாலை வந்தால் தான் அதன் அருமை புரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நான்கு வழிச்சாலை வந்த பிறகும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

 

ஆறு வழிச்சாலை விரைவுச்சாலை என வட மாநிலங்கள் சிறப்பான சாலை வசதியை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு வளர்ச்சி பாதையில் செல்லும் தமிழகத்தை எட்டு வழி சாலை வந்தால்தான் போக்குவரத்து நேரம் குறைந்து வணிகம் உள்ளிட்டவை மேம்படும் என்றும் முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

 

இதை கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றத்தில் எட்டுவழிச்சாலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon