குழந்தைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஒரு குழந்தையின் தாய் கொலை!
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் பெற்றோரும் சண்டையிட்டனர். இந்த மோதல் வலுத்ததில் ஒரு சிறுவனின் தாயை அவரது அண்டை வீட்டார் அடித்து நொறுக்கியதால் அந்த பெண் உயிரிழந்தார். அவரை அடித்துக் கொன்ற அண்டை வீட்டாரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக ஜெயின்பூர் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






