--- --:--:-- --

கருப்பின இளைஞர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது உறுதி!

13

அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. மின்னபோலிஸ் நகரைச் சேர்ந்த ஜார்ஜை கைது செய்த போலீஸ் ஒருவர் அவரது கழுத்தை நெரித்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

 

அது குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் ஜார்ஜ் அதிகாரபூர்வ உடற்கூறு ஆய்வு இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.

 

கவுன்சில் மருத்துவ ஆய்வாளர் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு தாலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்து இருப்பதாகவும் அது நிகழ்த்தப்பட்ட படுகொலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon