--- --:--:-- --

சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ள 900 அடி நீள பனிப்பாறை!

5

விண்வெளியில் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை சூரிய மண்டலத்துக்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஓம்வுமுமா என பெயரிடப்பட்டுள்ள இந்த பனிப்பாறையில் ஹைட்ரஜன் வாயு நிரம்பி இருப்பதாக கூறியுள்ள ஆய்வாளர்கள் இயற்கையில் இது மிகவும் அரிதான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த பனிப்பாறை தற்போது சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து உள்ளதாகவும் இதுபோன்ற ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்துக்குள் வருவது இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தற்போது சனி கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வரும் பனிப்பாறை அதனை கடந்து செல்ல பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று அவர்கள் கூறியுள்ளனர். பனிப்பாறையின் கிராஃபிக்ஸ் படத்தையும் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon