--- --:--:-- --

கள்ளக்காதலனுக்காக பச்சிளம் குழந்தை கடத்திய பெண்!

11

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல் விவகாரத்தில் பெண் ஒருவர் கைதான நிலையில் குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பத்தூரை சேர்ந்த நகீனா என்ற அந்த பெண் சேலத்தை சேர்ந்த சம்பத் குமார் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

 

ஆண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்துள்ளனர். அதன்பின் திருமணமானதை மறைத்து திருப்பத்தூரில் நூருல்லா என்ற இளைஞருடன் நெருக்கமாக பழகி உள்ளார். ஆனால் அவர் திருமணம் ஆனதை கண்டு பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் பிரிந்து சென்று விட்டார்.

 

இந்நிலையில் தான் கர்ப்பம் தரித்த தாகவும் ஒரு சில தினங்களில் பிரசவம் நடக்க உள்ளதாக பொய் கூறி நூருல்லாவை தன்னுடன் சேர்ந்து வாழும்படி கூறி வந்துள்ளார். ஆனால் ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு செய்து இருந்ததால் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லாத நிலையில் அரசு மருத்துவமனையில் குழந்தையை திருடி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon