--- --:--:-- --

4 வது மாடியில் இருந்து குதித்து செவிலியர் தற்கொலை! காரணம் என்ன?

16

நாமக்கல்லில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற அந்த செவிலியர் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

 

இந்த நிலையில் நேற்று பணி முடிந்தபிறகு மருத்துவமனையின் நான்காவது மாடிக்கு சென்று அவர் திடீரென மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் பிரியதர்ஷினி மேற்படிப்பு காரணமாக இந்த மாதத்துடன் வேலைக்கு வரமாட்டேன் என கூறியது தெரியவந்திருக்கிறது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon