--- --:--:-- --

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்! நாடு வளர்ச்சி பாதையில் நடை போடுவதாக பிரதமர் பெருமிதம்!

6

கொரொனாவை வீழ்த்தும் போராட்டத்தில் இந்தியா வெற்றி பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். நாடு விரைவாக பொருளாதார மீட்சி அடைந்து உலகிற்கே உதாரணமாக திகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இன்று இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்.

 

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளதுடன் லஞ்ச ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றில் இருந்து இந்த நாடு வெளியே வந்து இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

இக்காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்றம் பெற்றிருப்பதாகவும், மக்கள் உதவியுடன் அனைத்து தளங்களிலும் நாடு வளர்ச்சி பாதையில் நடை போடுவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்டவை தங்கள் அரசு செய்த சாதனைகள் எனவும் அவர் பட்டியலிட்டார்.

 

ஒன்பதரை கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் 72 ஆயிரம் கோடி ரூபாய் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியர்கள் ஒருங்கிணைந்து தங்கள் வலிமையைக் காட்டி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், புலம்பெயர் தொழிலாளர்கள் சிறு வணிகர்கள் என பலரும் சிரமங்களை சந்திக்க நேரிட்டாலும் அது பெரும் அழிவாக மாறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சட்டங்களையும் , விதிமுறைகளையும் ஒவ்வொரு இந்தியரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர் பொறுமை காக்கும் இந்தியர்களின் குணாதிசியமே நாட்டை பாதுகாப்பானதாகவும் பிற நாடுகளை விட சிறப்பானதாகவும் மாற்ற முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon