--- --:--:-- --

மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை! பொது முடக்கம் நீட்டிப்பா?

3

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர் வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக குறிப்பிட்டார்.

 

கொரொனா பரவல் தடுப்புக்கான பொது முடக்கம் மே 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன மாதிரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த சூழலில் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார் .

 

ஜூன் 1ம் தேதி முதல் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அல்லது பச்சை மண்டலங்களில் பேருந்துகளை இயக்க முடியுமா? எத்தனை பேருடன் பேருந்துகளை இயக்கலாம்? மற்றும் அது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஆலோசனைக்கு பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் எந்தவிதமான தளர்வுகளையும் தலைமை செயலரின் அனுமதி பெற்று தான் அறிவிக்க வேண்டும் என்றும் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்கியிருக்க விரும்பினால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon