--- --:--:-- --

சாலையை கடக்க முள்ளெலிக்கு உதவிய காகம்!

8

லாட்வியா நாட்டில் முள்ளெலி ஒன்று சாலையை கடக்க காகம் ஒன்று உதவி செய்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆக்ட்ரஸ் என்ற இடத்தில் வாகன ஓட்டி ஒருவர் தனது காரை செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே காகம் ஒன்று விளையாடியதைப் பார்த்து அவர் அருகில் சென்று பார்க்கும் போது முள்ளெலி ஒன்றிற்கு காகம் சாலையை கடக்க உதவி செய்தது தெரிய வந்தது.

 

மெதுவாக சென்ற முள்ளெலியை கொத்திய காகம் அதன் பின்பகுதியில் கொத்தி அதனை முன்னேறி செல்ல உதவியது. ஆனாலும் பயத்தின் காரணமாக முள்ளெலி நின்ற போதெல்லாம் அதற்கு உற்சாகமூட்டி ஒரு வழியாக சாலையை கடக்க செய்த பின்பு தன் வழியில் பறந்து சென்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon