--- --:--:-- --

நளினி மற்றும் முருகன் வீடியோ கால் பேச அனுமதிக்க முடியாது!

9

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மற்றும் முருகன் ஆகியோர் வீடியோகால் மூலம் வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடம் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துவிட்டது.

 

நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாயார் பத்மா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிறையில் உள்ள முருகனை தாயாரிடமும் லண்டனில் உள்ள தங்கையிடமும் தினமும் 10 நிமிடங்கள் வாட்ஸ் அப் வீடியோ கால் வாயிலாக பேசுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

 

ஏற்கனவே தந்தை காலமானபோது அவரது உடலை வீடியோ கால் மூலமாக பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறைத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதில் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமே பேசுவதற்கு சிறை விதிகளில் அனுமதி உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon