--- --:--:-- --

வெட்டுக்கிளி தாக்குதல் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வருமா ?

13

பாலைவன வெட்டுக்கிளிகள் வழக்கமாக ராஜஸ்தான் எல்லையோடு முடிவடையும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள படையெடுப்பு 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளதால் அச்சம் நிலவுகிறது.

 

ஆனால் தமிழ்நாட்டிற்கு வெட்டிகிளி படையெடுப்பு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என தெரிவித்துள்ள வேளாண்துறை ஒருவேளை அவ்வாறு ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறது.

 

இது தொடர்பான அறிவிப்பில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காணப்படும் வெட்டிகிளி படையெடுப்பு இதுவரை தக்காண பீடபூமியை தாண்டி வருவதில்லை என்பதால் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்பட்டு வருகிறது.

 

ஒருவேளை அவ்வாறு ஏற்பட்டால் வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகள், பெட்டரைசம் அணிசோபிலே எனும் எதிர் உயிர் பூஞ்சானம் போன்றவற்றை தெரிந்து அவற்றை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மேலத்திய மருந்தினை தெளிப்பான்கள், பெரிய டிராக்டர்கள் தீயணைப்பு வாகனங்கள் மூலம் பரந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் கோழி பறவைகளும் மூலமும் அரசு அனுமதியுடன் பூச்சிமருந்தை ஒட்டுமொத்த வான்வெளியில் தெளிப்பதன் மூலமும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் கூறப்பட்டிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon