மும்பையில் நடந்த மகளின் திருமணத்தை மதுரையில் வீடியோ காலில் பார்த்த பெற்றோர்!
பொது முடக்கம் காரணமாக மும்பையில் நடைபெற்ற மகளின் திருமணத்தில் பங்கேற்க முடியாமல் காணொளி மூலம் பார்த்து ஆசிர்வாதம் வழங்கிய மதுரையை சேர்ந்த பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.
சோழவந்தான் பகுதியை சேர்ந்த அர்ஜுனா என்ற பெண் மும்பையில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நேற்றைய தேதியில் மதுரையில் திருமணம் நடக்க ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் மும்பைக்கு சென்று பணிபுரிந்து வந்த இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக மணமக்கள் மதுரை திரும்ப முடியவில்லை. அப்பெண்ணின் பெற்றோர் மும்பைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் குறித்த தேதியில் திருமணம் நடத்திய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி மும்பையில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதில் மணப்பெண்ணின் பெற்றோர் பங்கேற்க முடியாத நிலையில் வாட்ஸ்அப் விடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் நேரலையில் பார்த்தனர். மேலும் வீடியோ மூலம் மக்களுக்கு ஆசி வழங்கிய பெண்ணின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் சிந்திய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






