--- --:--:-- --

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்தை நிறுத்தியதால் மணப்பெண்ணை கடத்திய மாப்பிள்ளை!

11

நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. ஆனால், திடீரென்று திருமணத்தை நிறுத்தியதால் அதிர்ச்சியடைந்த இளைஞர் திருமணம் செய்யவிருந்த பெண்ணை நண்பர்களோடு சேர்ந்து கடத்தியுள்ளார். கடத்தல் சம்பவத்தை போலீசார் சில மணிநேரங்கள் முறியடித்தது எப்படி? சினிமாவை மிஞ்சும் வகையில் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை பிடித்தது எப்படி?

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான எவனை. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான இளைஞர் 26 வயதான பவித்ரன் கோவையில் வசித்து வருகிறார். இருசக்கர வாகனங்களை வாங்கி விற்றும் வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பவித்ரனுக்கும் எவனைக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

 

ஆனால் ஏற்கனவே பவித்ரனுக்கு திருமணமாகி விவாகரத்து ஆனதை இளம் பெண் வீட்டாரிடம் பவித்ரன் மறைத்துள்ளார். தகவலறிந்த பெண் வீட்டார் அவருக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஆனால் திருமணம் செய்தால் எவனையை தான் திருமணம் செய்வேன் என பவித்ரன் சபதம் எடுத்துள்ளார். மேலும் எவனையை கடத்தி செல்லவும் திட்டமிட்டார்.

 

செவ்வாய்க்கிழமை காலை பவித்ரன் அவரது தம்பி வெங்கடேஷ் மற்றும் உறவுக்காரப் பெண் இரண்டு ஆண்கள் ஆகியோர் மல்லி கிராமத்தில் உள்ள எவனை வீட்டிற்கு சென்றனர். அங்கு எவனையின் கையை பிடித்து இழுத்து கடத்த முயன்றனர். பெண்ணின் தாய் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் தடுத்தனர். அவர்களை அடித்து கீழே தள்ளி விட்டு பவித்ரனும், வெங்கடேசனும் இளம்பெண்ணை தங்களது முன்னர் புல்லட்டில் தூக்கி வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.

 

சிவகாசி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எவனை புல்லட்டில் இருந்து கீழே குதித்தார். அப்போது அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டு எழுந்திருக்க முடியாமல் தவித்தார். மற்ற உறவினர்கள் வந்திருந்த காரில் தூக்கிப்போட்டு பவித்ரன், வெங்கடேசன் கடத்தி சென்றனர். மகள் கடத்தப்பட்ட தகவல் அறிந்த தந்தை மாதவன் விருதுநகர் மாவட்ட எஸ்பி அவசர அழைப்பு எண் மூலம் புகார் கொடுத்தார்.

 

அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ராஜபாளையம் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இளம் பெண்ணின் தந்தை புகார் கொடுக்கும்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட புல்லட்டின் உள்ளிட்ட முழு விவரங்களையும் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

 

மேலும் பெண்ணின் பெற்றோர் தகவலின் பேரில் பவித்ரனின் நண்பர் ஒருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் கிராமத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் பவித்ரன் கும்பல் பதுங்கி இருந்தது தெரியவந்தது. விரைந்த போலீசார் அங்கு உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த இடத்தை மீட்டனர்.

 

எவனத்தை கேரளாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்த நேரத்தில் மிகச் சரியாக போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் கடத்தலில் ஈடுபட்ட பவித்ரன், வெங்கடேஷ் உள்பட 8 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இளம்பெண் கடத்தப்பட்டு ஒன்றே முக்கால் மணி நேரத்தில் அவரை போலீசார் மீட்ட சம்பவம் சினிமைவை மிஞ்சும் வகையில் இருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon