ஆம்புலன்ஸ் ஓட்டுனருடன் செவிலியர் கள்ளக்காதல்! தாக்குதல் நடத்திய கணவர் மற்றும் மகன்கள்!
பெரம்பலூரில் கள்ளக் காதலால் குடும்பத்தை பிரிந்து சென்ற செவிலியர் மீது அவரது கணவரும், மகன்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த கண்ணன், ஜெயா ஆகியோருக்கு இரு மகன்கள் உள்ளனர். செவிலியர் ஆன ஜெயா பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பணியாற்றிய போது ஆம்புலன்ஸ் ஓட்டுனருடன் பழகி உள்ளார்.
இதனால் கணவருக்கும், மனைவிக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பெரம்பலூர் அருகே ரங்கநாதபுரத்தில் ஜெயா பணியாற்றுவதை கண்டுபிடித்த கண்ணனும் அவரது மகன்களும் தங்களுடன் வந்து விடுமாறு கூறியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளார் ஜெயா.
இதனால் ஆத்திரம் அடைந்த மகன்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த பெரம்பலூர் காவல் துறையினர் அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.






