--- --:--:-- --

கடன் தவணை செலுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம்!

12

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ளும் விதமாக அரசு பல்வேறு நிதி திட்டங்களை அறிவித்த நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் பல புதிய அறிவிப்புகளை அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கி கடன்களை வசூலிப்பதில் மூன்று மாதங்கள் வரை காலஅவகாசம் வழங்கலாம் என மார்ச் 27ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

 

அந்த சலுகை காலம் மே 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது மேலும் 3 மாதங்கள்நீட்டிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால கடனுக்கான ரெப்போ ரெட் விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது.

 

அதன்மூலம் வீட்டுக் கடன், தொழில் கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி குறைய உள்ளது. வங்கிகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் மக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த இரண்டு மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும், மத்திய அரசின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மூலதன கடன்களை அளிப்பதில் இறக்குமதி ஏற்றுமதி கடன்கள், சந்தை நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மாநில நிதி திட்டங்கள் என நான்கு முக்கிய செயல் திட்டங்களை அறிவித்துள்ளது.

 

புதிய கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்றும் நடப்பு நிதி ஆண்டில் இந்திய ஜிடிபி வளர்ச்சி எதிர்பார்ப்பு குறையும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon