NEET, JEE தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் செயலி!
NEET, JEE தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி பெறுவதற்காக நேஷனல் டெஸ்ட் அபியாஸ் என்ற செல்போன் செயலியை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அறிமுகம் செய்துள்ளது.
ஊரடங்கால் பயிற்சி மையங்களுக்கு சென்று நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள இயலாத நிலையில் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியை மத்திய, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிமுகம் செய்து வைத்தார்.
அனைத்து வகை செல்போன்கள் மற்றும் கணினியில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக என்டிஏ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது . செயலியை பதிவிறக்கம் செய்த பின் அதில் கேட்கப்பட்டுள்ள அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் நுழைவுத் தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை இலவசமாக எழுதி பயிற்சி பெறவேண்டும்.






