குழந்தைக்குப் போடப்பட்ட தடுப்பூசி உடைந்து தொடையில் சிக்கியதாக புகார்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி உடைந்து தொடையில் சிக்கியதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மரபனூர் இடையப்பட்டியை சேர்ந்த தாமரைச்செல்வி பிச்சாண்டவர் தம்பதிக்கு கடந்த மார்ச் 9ஆம் தேதி குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து தொடங்கி வீக்கம் ஏற்பட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தையை குளிக்க வைத்த போது உடைந்து ஊசிமுனை தட்டுப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது புகார் மனு திருச்சி இணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குழு அமைத்து விசாரணை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.






