இன்று முதல் ரயில்களுக்கு முன்பதிவு…! ஆனால் தமிழகத்திற்கு?

நாடெங்கும் ஜூன் முதல் தேதி முதல் இயக்கப்பட உள்ள 200 ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. எனினும் இந்த 200 ரயில்களில் ஒன்றுகூட தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. கொரொனா பரவலை தடுப்பதற்காக நான்காவது கட்ட பொது முடக்கம் மே 31ஆம் தேதி முடியும் நிலையில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயங்கும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் 200 ரயில்களின் விவரங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 200 ரயில்களுக்கு இன்று முதல் டிக்கெட் முன்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐ‌ஆர்‌சி‌டி‌சி இணையதளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் அதிகபட்சம் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் ஓடும் வகையில் ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

 

கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 31-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு ரயில்கள் எதையும் இயக்க வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டிருந்தார்.


Leave a Reply