--- --:--:-- --

பதவிக்காக தனது அப்பாவையே கொன்ற மகன்கள் ! பின்னணி என்ன?

5

அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் கனகசபை. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். இதைப்போல் இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

 

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 வருடங்களுக்கு முன்பிருந்தே முதல் மனைவியை பிரிந்த கனகசபை தன் இரண்டாவது மனைவி குடும்பத்தோடு வசித்து வந்தார். கீழப்பழுவூர் துணை மின்நிலையத்தில் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வந்த இவருக்கு சில நாட்களில் பதவி உயர்வும் கிடைக்க இருந்தது.

 

இந்த சூழலில் மின் அலுவலகத்தில் பணியில் இருந்த கனகசபை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். நள்ளிரவு 12 மணி வரை பணியில் இருந்த அவர் திடீரென கொடூரமாக கொல்லப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

 

அப்போது இந்த கொலையை செய்தது அவரது மகன்கள் தான் என தெரிய வந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். முதல் மனைவியான அம்சவள்ளிக்கு கலைச்செல்வன் மற்றும் கலைவாணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அரசு ஊழியரான கனகசபை தனக்கு வாரிசு என்ற இடத்தில் இவர்களின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

 

ஆனால் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தவர் அம்சவள்ளியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியின் பிள்ளைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பூர்வீக சொத்துக்களை எல்லாம் முதல் மனைவி மகன்களுக்கும் கொடுத்துவிட்டு மகளுக்கு திருமணமும் செய்து கொடுத்துள்ளான்.

 

இருந்தபோதிலும் முதல் தாரத்து மகன்கள் இரண்டு பேரும் தந்தையிடம் வந்து அடிக்கடி பணம் வாங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்தால் இரண்டாவது மனைவியின் கொள்ளைகளுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்கும் என்பதால் முதல் தாரத்து மகன்கள் இரண்டு பேரும் கனகசபையை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

 

சொத்துக்கள் மற்றும் வாரிசுதாரர் தொடர்பான ஆவணங்களை எல்லாம் மாற்றுவதற்கு முன்பாக தந்தையைக் கொன்றால் அனைத்தும் தங்களுக்கு கிடைக்கும் என திட்டமிட்டார்கள். அலுவலகத்தில் இருந்து தங்கள் தந்தையை கொடூரமாக கொன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த கலைச்செல்வன் மற்றும் கலைவாணனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon