உடல் முழுவதும் தேனீக்களை படரவிட்டு சிறுமி! மே 20 தேனீக்கள் தினம்!
உலக தேனீக்கள் தினத்தையொட்டி சிறுமி ஒருவர் தனது உடலில் தேனீக்களை பரவவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேனீக்கள் வளர்ப்பில் லாபம் கிடைத்து வருவதால் பலரும் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வாறு தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பழனி கொடைக்கானல் சாலையில் பகுதியில் உள்ள இசாக் என்பவரும் தேனீ வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார்.
மே 20 உலக தேனீக்கள் தினம் என்பதால் தேனீக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈசாக்கின் மகள் ரிமாஸ் தனது உடலில் தேனீக்களை படர விட்டார். லாபகரமான தேனீ வளர்ப்பிற்கு அரசின் கடன் உதவி மானியங்கள் கிடைக்க உதவ வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.






