--- --:--:-- --

ஜூலை 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதிக்க கோரிக்கை!

1

வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது .

 

தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்கள் சேர்க்கை நடத்தவும், பழைய கல்வி கட்டணத்தை பெற்றோரிடம் கேட்டுப் பெறவும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

வருகிற ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை அனைத்து தனியார் பள்ளிகளையும் திறந்துவிட தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறந்து கற்றல், கற்பித்தல் பணிகளை தொடர அனுமதி வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

முக கவசம், கையுறைகளை மாணவர்கள் வீட்டிலிருந்து அணிந்து வரலாம் என்றும் சமூக இடைவெளியுடன் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளை செய்யலாம் என்றும் அந்த சங்கத்தின் ஆலோசனை தெரிவித்துள்ளனர் . குழந்தைகளின் உடல் நிலையை பெற்றோர்கள் முழு பரிசோதனை செய்து எந்த நோயும் இல்லை என உறுதி செய்து மருத்துவச் சான்றிதழுடன் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

நிலவேம்பு கஷாயத்தை கடந்த காலங்களில் வழங்கியது போல கபசுர குடிநீரை அரசு 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தனியார் பள்ளி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon