--- --:--:-- --

காற்று மாசு குறைந்ததால் 200 கி.மீ அப்பால் இருந்தும் தெரியும் எவரெஸ்ட் சிகரம்!

13

ஊரடங்கால் காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து 200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டிலிருந்து காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர். உலகின் மிகப் பெரிய மலைச் சிகரமான எவரெஸ்ட் நேபாளம் வழியாக செல்லும் இமய மலைத்தொடரில் அமைந்துள்ளது.

 

நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிகரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊர் மக்களுக்கு பளிச்சென்று தெரியும் வகையில் காட்சி அளிக்க துவங்கியுள்ளது. இந்த காட்சியை வெளியிட்டுள்ள நேபாளி டைம்ஸ் பத்திரிக்கை ஊரடங்கால் நேபாளம் மற்றும் வட இந்தியாவில் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளதே இந்த காட்சியை தெளிவுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon