கல்கத்தாவில் இருந்து சொந்த ஊர் வந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அஞ்சி பேருந்திலிருந்து இறங்கி ஓட்டம்!
கல்கத்தாவில் இருந்து சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்தவர்கள் தனிமைபடுத்தபடுவர்கள் என எண்ணி மானா மதுரையில் பஸ்சை நிறுத்தி 19 பேர் தப்பியோட்டம் 13 பேரை பிடித்து ராமநாதபுரத்துக்கு மானாமதுரை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர் 6 பேரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை, மானாமதுரையில் கல்கத்தாவில் இருந்து சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மேற்கு வங்க மாநில கொல்கத்தா சேர்ந்த ஹோட்டல் தொழிலாளர்கள் 28பேர் தனி பேருந்தில் செந்த ஊர் வந்தனர். அவர்களில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 7பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களை தனிமைப்படுத்த சுகாதார துறையினர் கூட்டி சென்றனர் .

ராமநாதபுரம் செல்பவர்கள் பார்த்திபனூர் சுகாதார துறையினர் வசம் சென்று சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தி அனுப்பப்பட்டனர் .சிவகங்கையில்7 பேர் தனிமைப்படுத்த சுகாதார துறையினர் அழைத்து சென்றதை பார்த்தவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இதே போன்று நம்மையும் தனிமைபடுத்தபடுவார்கள் என்று தெரிந்த உடன் மானாமதுரை இரயில்வே கேட் அருகே பேருந்து சென்ற போது டிரைவரிடம் பேருந்தை நிறுத்த சொல்லி 19 பேர் இறங்கி தப்பி சென்றனர்.

டிரைவர் காவல் துறையினரிடம் தகவல் கொடுத்ததை தொடர்ந்து மானாமதுரை போலிசார் தப்பியவர்களை தேடி சென்று 13 பேரை மீட்டு அவர்களுக்கு அறிவுரை கூறி சாப்பாடு வாங்கி கொடுத்து அவர்கள் 13 பேரை ராமநாதபுரம் அனுப்பி வைத்தனர். தனிமை படுத்துதலுக்கு பயந்து தப்பி சென்ற மீதி 6பேரை மானாமதுரை ராமநாதபுரம் போலிசார் தேடி வருகின்றனர்.






