வாகனங்கள் நிறைந்த சாலையின் நடுவே ஓய்வெடுத்த சிறுத்தை!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சாலையின் நடுவே உடலில் காயத்துடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிறுத்தை ஒன்று தன்னை படம்பிடிக்க முயன்ற லாரி ஓட்டுநரை தாக்கியது. ஊரடங்கு காரணமாக மக்கள் முடங்கியுள்ள நிலையில் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில் ஹைதராபாத் அருகே வாகன போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை ஒன்று வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுத்தை தப்பி ஓடிவிட்டது.






