--- --:--:-- --

ஆன்லைன்-ல் ஆர்டர் செய்தால் போதும் வீட்டுக்கே மது வரும்!

11

மது வகைகளை வீட்டிற்கே சென்று வழங்குவதற்கான இணையதளத்தை சத்தீஸ்கர் அரசு தொடங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரொனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர மற்ற இடங்களில் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

 

மாநில சந்தை கழகத்தின் சி எஸ் எம் சி எல் இணையதளத்திலோ, மொபைல் ஆப்பிலோ, ஆதார் எண், செல்போன் எண் முகவரி ஆகியவற்றை பதிந்து ஆர்டர் கொடுத்து விட்டால் வீடு தேடி சென்று மது வழங்கப்படுகிறது. ஒருவர் ஒரு முறை ஐந்து லிட்டர் வரை மது ஆர்டர் வழங்கலாம். கொண்டு சென்று வழங்குவதற்கான கட்டணமாக 120 ரூபாய் பெறப்படும்.

 

மது வாங்குவதற்காக மக்கள் கடைக்கு வருவதையும் தெருக்களில் கூட்டம் கூடுவதையும் தவிர்க்கமுடியும். மதுவை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் இணையதளத்தில் மது விற்பது வெட்கக் கேடானது என தெரிவித்துள்ள பாஜக இதை திரும்ப பெற வேண்டும் என கேட்டு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon