ஆலங்குடி பேரூராட்சியில் கடைபிடிக்கப்பட்ட உழைப்பாளர் தினம்!
தமிழ் மாநில அரசு பணியாளர் சங்கம் சார்பாக மாநில தலைவர் மு.செ. கணேசன் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் திரு சி.கேசவன் மற்றும் மாவட்ட செயலாளர் க.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிழ்வில் அலுவலக பணியாளர்கள்,குடிநீர் பணியாளர்கள், தெருவிளக்கு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும், கொரானா வைரஸ் தடுப்பு பணியில் மிக சிரத்தையோடு, தீவிர களப்பணியாற்றுவதை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.மேலும் தமிழ் மாநில அரசுபணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் மு.செ.கணேசன் சால்வை அணவித்து, ஆவின் ஆரோக்ய பாணம் மற்றும் பழங்கள் வழங்கி வாழ்த்தி பாராட்டினார்கள்.

இந்நிகழ்வில் இளநிலை உதவியாளர்கள் சண்முகவள்ளி, ரேவதி, வரிதண்டலர், அருள்மொழி, சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் விழி தொண்டு நிறுவன நிர்வாகி மணிகண்டன் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் கணிணி பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், தெருவிளக்கு பணியாளர்கள், தூய்மைபணியாளர்கள் கலந்துகொண்டனர்.







