உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் தலைவர் முதலிடம்!
அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகில் முதல் பெரும் பணக்காரராக திகழ்கிறார். புளூம் பெர்க் நிறுவனம் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலையும் அவர்களின் சொத்து மதிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி அமேசான் நிறுவன தலைமை செயல் அலுவலர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். எல்விஎம்எச் நிறுவன தலைவர் 6 லட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.
ஃபேஸ்புக் தலைவர் மார்க்ஸ் 5 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார். பெர்க்ஸைர் ஹேத்வே தலைவர் பாரன் பப்பட் 5 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.







