--- --:--:-- --

கொரோனா பரவல் 2022ம் ஆண்டுக்கு அப்பாலும் நீடிக்கும்!

11

கொரொனா நோய் பரவல் 2022 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் நீடிக்கும் என ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் குளுமை மைய நிபுணர்கள் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரொனா அலை அலையாக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

 

உலக மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வரை நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அறிகுறியும் இல்லாமல் மக்களிடையே பரவும் தன்மை கொரொனாவுக்கு இருப்பதை அறிக்கையில் சுட்டிக் காட்டிய நிபுணர்கள் குளிர் காய்ச்சலை கட்டுப்படுத்துவதை காட்டிலும் கொரொனா வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon