சார்ஜ் போட்டு கொண்டே கால் பேசும் போது வெடித்த செல்போனின் பாகங்கள் பெண்மணியின் கண் மற்றும் காதுக்குள் சென்றது
திருவாரூர் மாவட்டத்தில் செல்போனில் சார்ஜ் போட்டு கொண்டே வெளிநாட்டிலுள்ள தந்தையுடன் வீடியோ கால் பேசும் போது செல்போன் வெடித்து இளம் பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சேர்ந்தவர் சுகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் இவருடைய மகள் ஆர்த்தி நேற்று காலை தனது தந்தையுடன் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
மேலும்செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டு அவர் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் செல்போன் வெடிக்க உடைந்த பாகங்கள் அந்தப் பெண்மணியின் கண் மற்றும் காதுக்குள் சென்றன. இதனால் வலியில் அலறி அடித்து பெண்மணியை அவரது குடும்பத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கு முதலுதவி முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அந்தப் பெண்மணியை அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






