--- --:--:-- --

இரவில் தரையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்!

9

பெங்களூரில் பலத்த மழை பெய்த நிலையில் காக்ரே என்னும் இடத்தில் சாலையில் பெரும் பள்ளம் விழுந்துள்ளது. பெங்களூரில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் காக்ரே எனும் இடத்தில் 100 அடி நீளத்திற்கு சாலையில் பள்ளம் விழுந்து. அந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் பள்ளத்தில் இறங்கி வந்தது.

 

பாதாள சாக்கடை திட்டத்தை நிறைய மண்கூட்டி தப்பாமல் மேலோட்டமாக சாலை அமைத்ததே சாலையில் பள்ளம் விழுந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது.

 

அனைத்து ஊழியர்களுக்கும் எந்த பிடித்தம் இல்லாமல் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படும் என இந்தியாவின் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தெரிவித்துள்ளது. ஊரடங்கால் விமான சேவைகள் முடங்கிய நிலையில் ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என கடந்த வாரம் இன்டிகோ அறிவித்தது.

இந்த நிலையில் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் ஊரடங்கை காரணம் காட்டி ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க கூடாது என மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று உள்ளதாக இண்டிகோ தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். பயணிகள் சேவை இல்லாத நிலையில் சரக்கு விமான சேவை வாயிலாக மட்டுமே இப்போது விமான நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon