--- --:--:-- --

எரிமலை வெடித்ததில் அழிந்து போன ஒரு நகரம்!

15

இத்தாலியில் எரிமலையால் அழிந்துபோன பொம்பையி நகரத்தின் டிரோன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கிபி 79 ஆம் ஆண்டு வெசுவியஸ் என்ற எரிமலை வெடித்து சிதறியதில் பொம்பையி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது. எரிமலை குழம்பு மற்றும் சாம்பலால் பொம்பையி நகரம் 23 அடி ஆழத்தில் புதைந்து போனது.

 

அதன் பின்னர் அந்த நகரம் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் 1749 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நகரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது . இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பதற்காக இதற்கு முன் யாரும் பார்த்திராத வண்ணம் எடுக்கப்பட்ட கழுகுப்பார்வை வீடியோவை இத்தாலி அரசு வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon