--- --:--:-- --

கால் உடைந்த முதியவர்…ஊரடங்கால் தவித்தவருக்கு உதவிய காவல் துறை!

7

ஆபத்தான நிலையில் வரும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரொனா முன்னெச்சரிக்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இதில் டெல்லி துணைநிலை ஆளுநர் அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுப்பதாக புகார் வருவதை சுட்டிக் காட்டினார்.

 

அவசர சிகிச்சைக்காக மிகவும் ஆபத்தான நிலையில் வரும் நோயாளி ஒருவர் இரண்டு மூன்று மருத்துவமனைகளுக்கு அலைய நேர்ந்தால் அவரின் உயிர் கூட பறிபோகும் அபாயம் இருப்பதாக வேதனை கூறினார். எனவே கொரொனாவுக்கு என ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளை தவிர மற்றவை வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்ட கால் உடைந்த முதியவருக்கு போலீசார் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ, டாக்ஸி, ஓடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் செய்வதறியாது திகைத்துப் போன உறவினர்கள் கால் உடைந்த முதியவரை தள்ளுவண்டியில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த போலீசார் முதியவரை கண்டனர். அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon