--- --:--:-- --

கோவையில் டெங்கு காய்ச்சலால் இளம் மருத்துவர் உயிரிழப்பு

6

நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த இளம் மருத்துவருக்கு சொந்த ஊர் மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். சத்தியமங்கலம் அருகே தெங்குமரஹடா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமுகையை சேர்ந்த ஜெயமோகன் என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். திடீரெனக் காய்ச்சலால் அவதிப்பட்ட ஜெயமோகன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் தேதி ஜெயமோகன் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகை நகரைச் சேர்ந்த மக்கள் பலரும் ஒன்றுகூடி ஜெயமோகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon