மருத்துவ பணியாளர்களை கவுரவிக்க கூகுள் வெளியிட்ட டுடூல்!
கொரொனா வைரஸ் பரவலை தடுக்க தீவிரமாக பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் கூகுள் தனது இணையதள முகப்பு பக்கத்தில் வெளியிட்டு கௌரவப்படுத்தியது. கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க மருத்துவ பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக மருத்துவ சேவை செய்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
மருத்துவ பணியாளர்கள் ஏற்படுத்தியுள்ள கூகுள் தனது இணையதள முகப்பு பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள டூடுலில் கொரொனாவை எதிர்த்து தீவிரமாக பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை கௌரவப்படுத்தி உள்ளது,மருத்துவ பணியாளர் போன்ற வடிவமைக்க டுடூல் அனைவரையும் கவர்ந்துள்ளது.







