--- --:--:-- --

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவுக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதி..! கனிமொழி எம்.பி., வழங்கினார்!!

8

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்புப் பிரிவை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., மேலும் ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்.

 

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவுக்கு சென்ற கனிமொழி எம் பி அங்கு எத்தனை படுக்கைகள் உள்ளன, என்னென்ன தேவை உள்ளனவை என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் (PPE kits), சானிடைசர்களையும் வழங்கினார்.

 

அதன்பின்னர், மருத்துவர்களுடன் கனிமொழி கலந்தாலோசித்தார். அப்போது, மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கொரோனா சிறப்பு பிரிவு மின்தூக்கிக்காக (lift) நிதி தேவைப்படுவதாக கோரிக்கை வைத்தனர்.
ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதி அளித்திருந்த நிலையில், தற்போது இன்று கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கனிமொழி வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon