--- --:--:-- --

கொரோனா வைரஸை யார் உருவாக்கினார்?நாங்கள் இல்லை!

13

கொரொனா வைரஸை தாங்கள் உருவாக்கவில்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறும் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீன தூதரக செய்தி தொடர்பாளர் ஜீரோ வைரசை நாங்கள் உருவாக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

சீனா மீது குறை சொல்வதை விட்டுவிட்டு வைரஸை ஒழிக்க சீனா எடுத்து வரும் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைரஸை கட்டுப்படுத்தும் அனைத்து நாடுகளும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

சீனாவின் உகான் நகரில் வைரஸ் பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டதாக கூறியவர் சீனாவில் தான் வைரஸ் உருவாகியது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்து பல்வேறு வகையில் இந்தியா உதவியதாகவும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon