--- --:--:-- --

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனோ விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள் !!!

9

கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து ‘கொரோனோ’ வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவமனை வளாகத்தில் நடத்தினர்.

 

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனோ வைரஸ் பரவி வரும் சூழலில், கோவை அரசு மருத்துவமனையின் மகளிர் மருத்துவத்துறை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து ‘கொரோனா’ வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவமனை வளாகத்தில் நடத்தினர்.

இன்று காலை கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இதனை மருத்துவமனை டீன் அசோகன் மற்றும் கல்லூரி முதல்வர் பழனியம்மாள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியின் போது கொரோனோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மருத்துவமனை வளாகத்தில் இருந்த மாணவர்களுக்கு வழங்கினர்.மேலும், கைகளை சுத்தமாக கழுவும் வழிமுறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது . இதனை தொடர்ந்து, தாய்மார்களுக்கு ஹார்லிக்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இது குறித்து டீன் அசோகன் கூறுகையில், “அனைவரும் வெளியே சென்று வருகையில் கை, கால்களை சுத்தமாக கழுவி விட்டு வீட்டிற்குள் செல்ல வேண்டும். முடிந்தவரையில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ககலாம் எனவும், கொரோனோ பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.இது குறித்த வதந்தியை பரப்ப வேண்டாம்.” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon