கழிவறை டிஸ்யூ பேப்பருக்காக பெண்களுக்குள் அடி தடி!
ஆஸ்திரேலியாவில் கழிப்பறைக்கு பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர்க்காக இரு பெண்கள் இணைந்து ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் அந்நாட்டு மக்கள் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கழிப்பறைக்கு பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பரில் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டிலுள்ள பத்திரிக்கை நிறுவனங்கள் கூட தினசரி பத்திரிக்கைகள் உடன் கூடுதலாக டிஸ்யூ பேப்பரை இணைத்து அதனை டிஷ்யூ பேப்பர் பயன்படுத் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சிட்னியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு டிஷ்யூ பேப்பர் பண்டலை இரு பெண்கள் எடுக்க முயன்றபோது மற்றொரு பெண் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




