--- --:--:-- --

மகளிர் தினம்: முழுவதும் பெண்கள் மட்டுமே இயக்கும் 52 ஏர் இந்தியா விமானங்கள்

4

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் பொருட்டு ஏர் இந்தியா நிறுவனம் 52 விமானங்களை முழுவதும் பெண் ஊழியர்களை கொண்டு இயக்க உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மகளிர் தினமான இன்று 8 சர்வதேச மற்றும் 44 உள்ளூர் விமான நிலையங்களை பெண் பணியாளர்களை மட்டும் வைத்து இயக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதில் டெல்லி முதல் சான் பிரான்சிஸ்கோ வரை செல்லும் விமானமும் அடங்கும் பெண்மையை போற்றும் விதமாக இந்த ஏற்பாட்டை செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon