முககவசங்களை விற்க நோ சொன்ன ஃபேஸ்புக்!
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மருத்துவ முக கவசங்களை விளம்பரம் செய்வதற்கு அந்நிறுவனம் தடைவிதித்துள்ளது. மக்களின் அச்சத்தை பயன்படுத்தி வணிகர்கள் சிலர் லாப நோக்கத்தில் முக கவசம் விற்பதை தடுப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரொனா அச்சுறுத்தலை உற்று கவனித்து வருவதாகவும் உலகம் முழுவதும் நிலவிவரும் அச்சத்தை பயன்படுத்தி சிலர் விளம்பரம் தொடர்பான விதிகளை மீறி வருவதாக பேஸ்புக் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் மருத்துவ முக கவசங்களை விளம்பரப்படுத்துவது தற்காலிக தடை விதிப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




