--- --:--:-- --

நியூசிலாந்துடனான போட்டிகள் எல்லாமே “ஒயிட்வாஷ்” தான்..! 2-வது டெஸ்டிலும் இந்தியா படுதோல்வி!!

sd

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மூன்றே நாளில் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியிலும் இந்தியா படுதோல்வி அடைந்துy தொடரையும் 2-0 என இழந்து ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்த டூரில் இந்தியா நியூசிலாந்து இடையே நடந்த டி 20, ஒரு நாள் மாற்றும் டெஸ்ட் என அனைத்து தொடர்களுமே ஒயிட்வாஷ் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் கடைசி போட்டியாக, 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 242 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தொடர்ந்து நியூசிலாந்தை 235 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 7 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா. ஆனால் 2-வது இன்னிங்சில் வழக்கம் போல சொதப்பலோ சொதப்பல் என இந்திய வீரர்கள் சொதப்பி விட்டனர். இதனால் 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.

 

இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதற்கொண்டு முன்னணி பாட்ஸ்மேன்கள் அனைவருமே நியூசிலாந்து பந்து வீச்சின் முன் சரணாகதி அடைந்து சொற்ப ரன் களில் நடையைக் கட்டினர்.இந்தியத் தரப்பில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன் என்றால் புஜாரா எடுத்த 24 ரன்கள் தான். கோஹ்லி (14), பிரித்விஷா (14), ஜடேஜா அவுட்டாகாமல் 16 ரன்கள் என எடுக்க மற்ற 7 வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்ட 124 ரன்களில் 2-வது இன்னிங்ஸை இழந்தது இந்தியா.

 

இதனால் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடியது நியூசிலாந்து .அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லாதம் (52), பிளென்டல் (55) இருவரும் அரைசதம் அடிக்க 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து .இதனால் முதலாவது டெஸ்டிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நியூசிலாந்து தொடரை 2-0 என வென்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

 

 இந்த டூரில் நடந்த மூன்று விதமான தொடர்களுமே ஒயிட்வாஷ் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முதலில் நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இதற்கு பதிலடியாக ஒரு நாள் தொடரை 3-0 , டெஸ்ட் தொடரை 2-0 என்று வென்று காட்டி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon