--- --:--:-- --

சென்னை அருகே ரசாயனக் கிடங்கில் பயங்கர தீ விபத்து..! தீயை அணைக்க பல மணி நேர போராட்டம்!!

19

சென்னையை அடுத்த மாதவரத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.

 

மாதவரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ரசாயன கிடங்கு உள்ளது. இங்கு மருந்து தயாரிப்பதற்கான ரசாயனப் பொருட்கள் பேரல், பேரலாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட ரசாயனப் பொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 

இந்த கிடங்கில் இன்று மாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பேரல்களில் இருந்த ரசாயனப் பொருட்கள் தீப்பிடித்து வெடித்து சிதறின. பல மீட்டர் உயரத்துக்கு நீப்பிழம்பாக வெடித்து சிதற ஆரம்பித்தன. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டாலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

 

இந்த தீ விபத்தால் எழுந்த கரூம் புகையால் அப்பகுதி மக்கள் கண் எரிச்சல் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் அவசர உதவிக்காக பாதிக்கப்பட்டோரை மருத்துவமனை அழைத்துச் செல்லவும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் பற்றிய தகவல் இல்லை. ஆனால் தீயில் நாசமான ரசாயன பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon