--- --:--:-- --

எனது குழந்தைக்கு 28 அம்மாக்கள்- கொரானா பாதித்த தாயார் நெகிழ்ச்சி

9

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரை பல வாரங்களாக பிரிந்து இருந்த இரண்டு வயது குழந்தை அதன் தாயார் உடல் நலம் தேறியதைத்தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டது. தனது குழந்தைக்கு 28 அம்மாக்கள் இருப்பதாக அந்த குழந்தையை பத்திரமாக கவனித்துக் கொண்ட 28 செவிலியர்களுக்கும் குழந்தையின் தாயார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

குவாங்டாங் மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள ஒரு குடும்பத்தில் இரண்டு வயது ஆண் குழந்தையை தவிர மற்ற அனைவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதையடுத்து குழந்தை பத்திரமாக வேறு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், அதனை 28 செவிலியர்கள் நன்றாக கவனித்துக் கொண்டனர். இதுகுறித்து வீடியோவை சீன அரசு ஊடகமான சீங்க்குவா வெளியிட்ட நிலையில் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon