‘திட்டமிட்டதோ ஒரு கோடி, பெறப்பட்டதோ 2 கோடி’ – கையெழுத்து இயக்கம் குறித்து மு.க.ஸ்டாலின் பேச்சு
கையெழுத்து இயக்கம் என்பது ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் என்று அமைச்சர் கா பாண்டியராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருவள்ளூர் உழவர் சந்தை எதிரே திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினர் இதில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஸ்டாலின் பாரதிய ஜனதா ஆட்சியில் நாடு முழுவதும் உள்ள மக்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற திட்டமிட்ட நிலையில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தது குறித்து அவர் விமர்சித்தார்.






