“வாய்க்குப் போடுங்க பூட்டு” காவல்துறை வெளியிட்டுள்ள குறும்படம்
ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படத்தை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
ஏடிஎம் அட்டை விவரங்கள் குறித்து கேட்டு வரும் செல்போன் அழைப்புகளை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அந்த குறும்படம் பேசுகிறது.
தொடர்ந்து பேசிய மாநகர காவல் ஆணையர் இயக்க விசுவநாதன் ஆன்லைன் மோசடி மற்றும் ஏடிஎம் அட்டை மோசடிகளில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களின் பயம், ஆசை என்ற இரண்டு அம்சங்களை பயன்படுத்திக் கொள்வதாகவும், ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருப்பதாகவும் கூறிய காவல் ஆணையர் அதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.






