செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய ராமநாதபுரம் நகராட்சி நிர்வாக டிரைவரின் போட்டோ வைரல்
ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம் நகராட்சி வாகனம் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்கும் சின்னக்கடை பகுதியில் நகராட்சி டிரைவர் செல் போன் பேசிக்கொண்டு மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் வாகனத்தை இயக்கியது பலர் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இவர் செல் போன் பேசியபடி சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.






