--- --:--:-- --

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறவேண்டி; திருமுருகன்பூண்டியில் தி.மு.க கூட்டணியினர் கையெழுத்து இயக்கம்

356451f0-962a-4eab-8aa0-cbbe23d2f312

மத்திய அரசு கொண்டுவந்த, மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும் என்பவைகளை வலியுறுத்தி , தி மு க கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் கையெமுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் நேற்று (2 ந் தேதி) தொடக்கி வைத்தார்.

 

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்திலும் பா ஜ க., அ தி மு க மற்றும் அதன் கூட்டணியில் ஒரு சில கட்சிகள் தவிர்த்து அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி கடுமையாக எதிர்த்து வருகின்றன.

 

இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக, தி மு க கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் தி மு க கூட்டணி கட்சிகள் சார்பில் 2 ந் தேதி முதல் 8-ந்தேதி வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி, 3 கோடி பேரின் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து நேற்று திருப்பூர் வடக்கு மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7 வது வார்டில் உள்ள நெசவாளர் காலனி மற்றும் விரிவாக பகுதியில் கையெடுத்து இயக்கம் நடைபெற்றது.

 

தி.மு.க நகர செயலாளர் பாரதி மேற்பார்வையில் நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி என்கிற மூர்த்தி, 7 வது வார்டு செயலாளர் ராமசந்திரன் ஆகியோரது தலைமையில் மகளிரணியின் பானுமதி, ருக்குமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நஞ்சப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் உதயகுமார் மற்றும் கட்சியினர் ஆகியோர் அப்பகுதி முழுவது வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கினர். இதில் பொதுமக்கள், பெண்கள், கல்லூரி மாணவிகள், குறிப்பாக அ.தி.மு.க வினரும் ஆர்வமாக கையெழுத்து போட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon