திருவாடானை அருகே லாரியில் பற்றிய தீ
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாரூர் அருகே திருச்சி துவரங்குறிச்சியைச் சேர்ந்த வீரன்னா என்பவருடைய லாரியை சுந்தர் (25) ஒட்டி வந்தார்.

சனிகிழமை கூகுடி அருகே வைக்கோல் ஏற்றி வந்த போது நீர்க்குன்றம் விலக்கு ரோடு வந்து கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் தாழ்வாக தொங்கிய மின் வயரில் உரசி தீப் பற்றியது. தீ மளமளவென எரிய தொடங்கியதுடன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து பத்திரமாக லாரியையும், டிரைவரையும் மீட்டனர்.



